முதுகலை எம்.எ. தமிழ்
திட்டத்தின் நோக்கம் மற்றும் ஆக்கங்கள்
- முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு (Master of Arts in Tamil) திட்டத்தின் குறிக்கோள் தமிழ் இலக்கியத்தின் உலகளாவிய மதிப்புகள் குறித்தச் செய்திகளை வழங்குகிறது.
- வளரும் இளையத் தலைமுறையினருக்கு மொழி கலாச்சாரம், மற்றும் தமிழ்ப் பண்பாட்டு நெறிமுறைகளை வழங்குவதாக இக்கல்வித் திட்டம் அமைகிறது.
- நவீனத்தின் சூழலில் இருக்கும் சந்ததியினருக்கு இலக்கியத்தை படிப்பதின் மூலம் எதிர்காலச் சந்ததியினரும் மொழியை அறிய இவர்கள் பெருந்துணை செய்கிறார்கள் என்பதோடு வருங்கால மாணவர்கள் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை கற்க ஆர்வத்தைக்கொண்டு செல்லமுடியும் என்பதை இந்தப்பாடத்திட்டம் உணர்த்துகிறது.
- மொழி மற்றும் தமிழ் அறிஞர்களால் செய்யப்பட்ட பல்வேறு தொன்மையான படைப்புகள் மற்றும் இலக்குகளுடன் பொருந்துமாறு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுகிறது
- மேல்நிலைக் கல்விக்கான அணுகலை இதன்வழி ஏற்படுத்துவதன் மூலமும், அடிப்படை ஆய்வுச் சூழலை வழங்குவதன் மூலமும் எதிர்காலப் பயன்முறைக்கு இப்பாடத்திட்டம் வழிவகை செய்யும் என்பதை நோக்கமாகக்கொண்டு முதுகலைப் பாடத்திட்டம் வடிவமைக்கபட்டிருக்கிறது.
வேலை வாய்ப்பிற்கானத் தளங்கள்
தமிழ் இலக்கியம் படித்தால் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும். தமிழ்நாடு, மற்றும் இந்திய அளவில் நடத்தப்படும் TNPC, UPSC போன்ற தேர்வுகளுக்கு (நேரடியாகப் பயிற்சி வழங்கும் நிறுவனங்களைக் கொண்டு) பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பயிற்சியின் வாயிலாக தமிழ்நாடளவிலும் இந்திய அளவிலும் வேலை வாய்ப்புகளைப் பெற இப்பாடத்திட்டம் வழி செய்கின்றது.
தமிழ் மொழி பட்டதாரிகள் கல்வி நிறுவனங்கள், அச்சு நிறுவனங்கள், பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள், தனியார் நிறுவனங்கள், விளம்பர முகவர் நிறுவனங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் பிற மொழி சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றலாம்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத் தமிழாசிரியர், பன்னாட்டு நிறுவனங்களில் தமிழ் டெலிகாலர், நாளேடுகள், வானொலி, பாராளுமன்றம், சட்டன்றம், தூதரகங்கள் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பாளர், அரசு அலுவலகங்களில் பத்திர எழுத்தர், வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி, ஆன்லைன் தமிழ் ஆசிரியர் போன்ற பல்வேறு வேலை வாய்புகளை முதுகலைப் பட்டப்படிப்பின்மூலம் பெறமுடியும்
மேலும் தமிழ் டெலி அழைப்பாளர், தொலைக்காட்சி, வானொலி வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர் (T.V Radio Commentator, anchor), பின்னணி குரல அமைப்பாளர் (dubbing Artist ) இதில் 1மணி நேரத்திற்கு ஊதியம் என்ற வகையில் மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டமுடியும் என்பதை தற்காலத்தில் அறியமுடிகிறது.
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மொழி மற்றும் கலாச்சார மன்றங்களில். துணைத்தூதரகச் செயலகங்களில் தமிழ்மொழி மற்றும் ஆங்கிலம் படித்தவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் நிறைந்துள்ளன என்பதையும் அறியமுடிகிறது.